கொரோனா சிகிச்சை மையத்தில் முதியவர் தற்கொலை - தூக்கில் தொங்கினார்


கொரோனா சிகிச்சை மையத்தில் முதியவர் தற்கொலை - தூக்கில் தொங்கினார்
x
தினத்தந்தி 2 May 2021 12:54 PM GMT (Updated: 2 May 2021 12:54 PM GMT)

அம்பத்தூர் அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க. நகர்,

சென்னை பெரம்பூர் மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா (வயது 65). இவர், கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 24-ந் தேதி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சைக்கு பிறகு கடந்த 29-ந்தேதி அம்பத்தூரைஅடுத்த அத்திப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டு இருந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த செல்லையா, நேற்று இரவு திடீரென கொரோனா சிகிச்சை மையத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story