கோவில்பட்டி தொகுதியில் டி.டி.வி. தினகரன் தோல்வி
கோவில்பட்டி தொகுதியி்ல் டி.டி.வி. தினகரன்தோல்வி அடைந்தார்.
தூத்துக்குடி:
கோவில்பட்டி தொகுதியில் அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தோல்வி அடைந்தார். அவர் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் 12,403 வாக்கு வித்தியாசத்தில் வீழ்ந்தார்.
கோவில்பட்டி தொகுதி
கோவில்பட்டி ெதாகுதியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் போட்டியிட்டதால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்று இருந்தது. கோவில்பட்டி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 65 ஆயிரத்து 915 பேர். இதில் தேர்தல் அன்று 1 லட்சத்து 80 ஆயிரத்து 928 பேர் வாக்களித்தனர்.
கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் செ.கடம்பூர் ராஜூ, டி.டி.வி தினகரன் ஆகியோரை தவிர தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கி.சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கு.கதிரவன், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கோமதி உள்பட 26 பேர் போட்டியிட்டனர்.
தினகரன் தோல்வி
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்று வந்தனர். பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ராஜூ முன்னிைல பெற்றார். ஒரு சில சுற்றுகளில் டி.டி.வி. தினகரன் முன்னிலை பெற்று வந்தார். இதனால் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி எழுந்தது. முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ராஜூ 68,556 வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 56,153 வாக்குகளும் பெற்றனர். அதாவது 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ராஜூ வீழ்த்தினார்.
வாக்கு விவரம்
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
கடம்பூர் ராஜூ
(அ.தி.மு.க.)- 68,556
டி.டி.வி. தினகரன்
(அ.ம.மு.க.)- 56,153
சீனிவாசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)- 37,380
கோமதி மாரியப்பன்
(நாம் தமிழர் கட்சி)- 9,213
கதிரவன் (மக்கள் நீதி மய்யம்) - 3,667
அதிகுமார் (சுயே)- 643
ரமேஷ் கண்ணன்
(சுயே)- 499
பே.சுபாஷ் (சுயே)- 448
சிவசுப்பிரமணியன்
(சுயே)- 417
குணசேகரன் (சுயே)-411
காளிராஜ் (சுயே)-318
சண்முகசுந்தரம் (பகுஜன்திராவிட கட்சி) -246
நம்பி எம்.ஜி.ஆர். (அ.இ.எம்.ஜி.ஆர்.ம.மு.க.)- 244
ஜெ.ரவிசங்கர் ஜெயச்சந்திரன் (சுயே)- 205
ரா.ராமச்சந்திரன் (பகுஜன் சமாஜ் கட்சி)- 203
உடையார்
(நாம் இந்தியர் கட்சி) - 175
எம்.மாரிமுத்து (சுயே.)- 133
பட்டுராணி (சுயே)-133
கண்ணன் (சுயே)-121
பொன்னுசாமி (சுயே)-121
மந்திரசூடாமணி
(சுயே)-104
ராஜ்குமார் போலையா (யூனிவர்சல் பிரதர்ஹூட் மூவ்மெண்ட் )- 100
ரங்கநாயகலு (சுயே)-90
ராஜா (சுயே)-79
பாண்டிமுனீசுவரி
(சுயே)-79
ராமசாமி (சுயே)-66
நோட்டா -1,124.
Related Tags :
Next Story