தி.மு.க. வேட்பாளர் மஸ்தான் எம்.எல்.ஏ. மீண்டும் வெற்றி
செஞ்சி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மஸ்தான் எம்.எல்.ஏ. மீண்டும் பெற்றிபெற்றுள்ளார். இவர் பா.ம.க. வேட்பாளரை விட கூடுதலாக 35,803 வாக்குகள் பெற்றுள்ளார்.
செஞ்சி,
செஞ்சி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி கே.மஸ்தான் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக பா.ம.க.வை சேர்ந்த பெ.ராஜேந்திரன், அ.ம.மு.க. வேட்பாளராக கவுதம்சாகர், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சுகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக ஸ்ரீபதி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக ஜெகஜானந்தம், அண்ணா திராவிடர் கழக வேட்பாளராக ஏழுமலை மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
செஞ்சி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ள செஞ்சி மஸ்தானுக்கும், பா.ம.க. வேட்பாளரான ராஜேந்திரனுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. இந்த தொகுதியில் கடந்த மாதம் 6-ந் தேதி 363 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 60 ஆயிரத்து 788 பேரில் தபால் வாக்கையும் சேர்த்து 2 லட்சத்து 10 ஆயிரத்து 309 வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை தாமதம்
வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், காரியமங்கலத்தில் உள்ள டேனி பொறியியல் கல்லூரியில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்த வாக்குகள் அனைத்தும் நேற்று காலையில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன. இதில் முதல் சுற்றில் இருந்தே செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்துக்கொண்டே வந்தார். 6 மின்னணு எந்திரங்களில் உள்ள பேட்டரிகள் பழுதானதால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது. இவை சரிசெய்யப்பட்டு கடையில் எண்ணப்பட்டன.
செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. வெற்றி
இதில் தி.மு.க. வேட்பாளரான செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தபால் ஓட்டுகள் 1942-ஐயும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 625 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ராஜேந்திரன் 73 ஆயிரத்து 822 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதன் மூலம் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. 35 ஆயிரத்து 803 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
அ.ம.மு.க. வேட்பாளர் கவுதம் சாகர் 4 ஆயிரத்து 811 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகுமார் 9 ஆயிரத்து 920 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீபதி 2 ஆயிரத்து 151 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவிற்கு 2 ஆயிரத்து 279 வாக்குகள் பதிவாகியுள்ளது. தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்களை தவிர மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
சுற்றுவாரியாக முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
முதல் சுற்று
தி.மு.க.-4670
பா.ம.க.-3367
நாம் தமிழர் கட்சி-576
அ.ம.மு.க.-134
மக்கள் நீதி மய்யம்-32
நோட்டா-79
2-வது சுற்று
தி.மு.க.-4117
பா.ம.க.-2068
நாம் தமிழர் கட்சி-50
அ.ம.மு.க.-144
மக்கள் நீதி மய்யம்-130
நோட்டா-126
3-வது சுற்று
தி.மு.க.-4010
பா.ம.க.-2132
நாம் தமிழர் கட்சி-511
அ.ம.மு.க.-95
மக்கள் நீதி மய்யம்-61
நோட்டா-84
4-வது சுற்று
தி.மு.க.-4613
பா.ம.க.-2856
நாம் தமிழர் கட்சி-409
அ.ம.மு.க.-180
மக்கள் நீதி மய்யம்-64
நோட்டா-105
5-வது சுற்று
தி.மு.க.-3574
பா.ம.க.-3123
நாம் தமிழர் கட்சி-261
அ.ம.மு.க.-198
மக்கள் நீதி மய்யம்-51
நோட்டா-70
6-வது சுற்று
தி.மு.க.-3958
பா.ம.க.-2439
நாம் தமிழர் கட்சி-375
அ.ம.மு.க.-178
மக்கள் நீதி மய்யம்-62
நோட்டா-82
7-வது சுற்று
தி.மு.க.-4242
பா.ம.க.-2428
நாம் தமிழர் கட்சி-362
அ.ம.மு.க.-139
மக்கள் நீதி மய்யம்-68
நோட்டா-81
8-வது சுற்று
தி.மு.க.-4149
பா.ம.க.-2281
நாம் தமிழர் கட்சி-480
அ.ம.மு.க.-163
மக்கள் நீதி மய்யம்-105
நோட்டா-105
9-வது சுற்று
தி.மு.க.-3541
பா.ம.க.-3048
நாம் தமிழர் கட்சி-270
அ.ம.மு.க.-129
மக்கள் நீதி மய்யம்-31
நோட்டா-66
10-வது சுற்று
தி.மு.க.-3737
பா.ம.க.-3494
நாம் தமிழர் கட்சி-283
அ.ம.மு.க.-161
மக்கள் நீதி மய்யம்-56
நோட்டா-73
11-வது சுற்று
தி.மு.க.-4020
பா.ம.க.-3394
நாம் தமிழர் கட்சி-406
அ.ம.மு.க.-155
மக்கள் நீதி மய்யம்-59
நோட்டா-85
12-வது சுற்று
தி.மு.க.-3676
பா.ம.க.-2809
நாம் தமிழர் கட்சி-348
அ.ம.மு.க.-149
மக்கள் நீதி மய்யம்-91
நோட்டா-98
13-வது சுற்று
தி.மு.க.-4369
பா.ம.க.-2717
நாம் தமிழர் கட்சி-287
அ.ம.மு.க.-181
மக்கள் நீதி மய்யம்-85
நோட்டா-86
14-வது சுற்று
தி.மு.க.-4786
பா.ம.க.-2178
நாம் தமிழர் கட்சி-632
அ.ம.மு.க.-217
மக்கள் நீதி மய்யம்-65
நோட்டா-98
15-வது சுற்று
தி.மு.க.-4004
பா.ம.க.-2775
நாம் தமிழர் கட்சி-446
அ.ம.மு.க.-150
மக்கள் நீதி மய்யம்-87
நோட்டா-97
16-வது சுற்று
தி.மு.க.-4397
பா.ம.க.-2679
நாம் தமிழர் கட்சி-393
அ.ம.மு.க.-182
மக்கள் நீதி மய்யம்-68
நோட்டா-103
17-வது சுற்று
தி.மு.க.-3071
பா.ம.க.-3709
நாம் தமிழர் கட்சி-325
அ.ம.மு.க.-188
மக்கள் நீதி மய்யம்-38
நோட்டா-81
18-வது சுற்று
தி.மு.க.-4342
பா.ம.க.-2479
நாம் தமிழர் கட்சி-316
அ.ம.மு.க.-193
மக்கள் நீதி மய்யம்-108
நோட்டா-97
19-வது சுற்று
தி.மு.க.-3503
பா.ம.க.-3143
நாம் தமிழர் கட்சி-403
அ.ம.மு.க.-164
மக்கள் நீதி மய்யம்-67
நோட்டா-75
20-வது சுற்று
தி.மு.க.-3563
பா.ம.க.-2833
நாம் தமிழர் கட்சி-316
அ.ம.மு.க.-229
மக்கள் நீதி மய்யம்-74
நோட்டா-73
21-வது சுற்று
தி.மு.க.-4693
பா.ம.க.-3039
நாம் தமிழர் கட்சி-285
அ.ம.மு.க.-201
மக்கள் நீதி மய்யம்-56
நோட்டா-99
22-வது சுற்று
தி.மு.க.-4122
பா.ம.க.-2187
நாம் தமிழர் கட்சி-356
அ.ம.மு.க.-200
மக்கள் நீதி மய்யம்-184
நோட்டா-90
23-வது சுற்று
தி.மு.க.-4712
பா.ம.க.-2467
நாம் தமிழர் கட்சி-263
அ.ம.மு.க.-334
மக்கள் நீதி மய்யம்-170
நோட்டா-70
24-வது சுற்று
தி.மு.க.-3850
பா.ம.க.-3573
நாம் தமிழர் கட்சி-258
அ.ம.மு.க.-144
மக்கள் நீதி மய்யம்-51
நோட்டா-62
25-வது சுற்று
தி.மு.க.-3804
பா.ம.க.-2462
நாம் தமிழர் கட்சி-348
அ.ம.மு.க.-231
மக்கள் நீதி மய்யம்-118
நோட்டா-67
26-வது சுற்று
தி.மு.க.-4089
பா.ம.க.-2273
நாம் தமிழர் கட்சி-357
அ.ம.மு.க.-214
மக்கள் நீதி மய்யம்-121
நோட்டா-63
Related Tags :
Next Story