தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கீதாஜீவன் மீண்டும் வெற்றி
தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கீதாஜீவன் மீண்டும் வெற்றிபெற்றார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கீதாஜீவன் மீண்டும் வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணும் பணி
தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 சட்டசபை ெதாகுதிகளில் பதிவான வாக்குகள், தூத்துக்குடி வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எண்ணப்பட்டது. இதற்காக அங்கு ஏராளமான மேஜைகள் போடப்பட்டு இருந்தன. அங்கு வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
தி.மு.க. வெற்றி
தூத்துக்குடி சட்டசபை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 497 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 838 பேர் வாக்களித்தனர். தூத்துக்குடி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. பெ.கீதாஜீவன், அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் உ.சந்திரன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ச.ம.க. சார்பில் என்.சுந்தர், நாம் தமிழர் கட்சி சார்பில் வி.வேல்ராஜ் உள்பட 26 பேர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க., த.மா.கா. வேட்பாளர்கள் கணிசமான வாக்குகள் பெற்று வந்தனர். இறுதியில் தி.மு.க. வேட்பாளர் கீதாஜீவன் 92 ஆயிரத்து 314 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். த.மா.கா. வேட்பாளர் விஜயசீலனுக்கு 42 ஆயிரத்து 4 வாக்குள் கிடைத்தன.
வாக்குகள் விவரம்
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:-
1. பெ.கீதாஜீவன்
(தி.மு.க.)- 92,314
2. எஸ்.டி.ஆர்.விஜயசீலன்
(த.மா.கா.)- 42,004
3. உ.சந்திரன்
(தே.மு.தி.க.)- 4,040
4. என்.சுந்தர் (ச.ம.க.)- 10,534
5. வி.வேல்ராஜ்
(நாம் தமிழர் கட்சி)- 30,937
6. அ.அசோக்குமார் (பகுஜன் சமாஜ் கட்சி)- 436
7. எஸ்.சுபாஷ் (இந்திய குடியரசு கட்சி, அத்வாலே)- 161
8. கே.சுப்பிரமணி (சிவசேனா)- 124
9. ஜி.செல்வவிநாயகம் (வீரத்தியாகி விசுவநாததாஸ் தொழிலாளர் கட்சி)- 269
10. என்.பாலசுப்பிரமணியன் (அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்)- 127
11. ஏ.மகராஜன் (பகுஜன் திராவிட கட்சி)- 93
12. வி.ராஜசேகர் (யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா பார்ட்டி)- 915
13. ஜெ.அருண் நேரு ராஜ் (சுயே)- 142
14. ஜெ.ஆல்டிரின் ஏர்மார்ஷல் தயாராம் (சுயே)- 167
15. சி.கணேஷ் அய்யாத்துரை (சுயே)- 116
16. எஸ்.கிருஷ்ணன்
(சுயே) - 182
17. ஜே.சாமுவேல்
(சுயே) - 138
18. ஜெ.சிவனேசுவரன்
(சுயே)- 2,866
19. ஜி.செல்வம் (சுயே)- 75
20. எஸ்.பாலசுந்தரம்
(சுயே)- 87
21. மரியதேவசகாய ஜானி
(சுயே)- 446
22. ஏ.முகம்மது இம்ரான் அரபி (சுயே)- 62
23. ராமகுணசீலன்
(சுயே)- 88
24. ஏ.ராஜவேல் (சுயே)- 282
25. எம்.லிங்கராஜா
(சுயே)- 70
26. ஏ.ஜெயலலிதா
(சுயே)- 163
27. நோட்டா - 1,569
Related Tags :
Next Story