திருவாரூர் அருகே தகராறில் காயமடைந்த வாலிபர் சாவு கொலை வழக்கில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கைது


திருவாரூர் அருகே தகராறில் காயமடைந்த வாலிபர் சாவு கொலை வழக்கில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 2 May 2021 5:59 PM GMT (Updated: 2 May 2021 5:59 PM GMT)

திருவாரூர் அருகே தகராறில் காயமடைந்த வாலிபர் இறந்தார். இது தொடர்பாக எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருவாரூர், 

திருவாரூர் அருகே உள்ள புலிவலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மகன் விக்னேஷ்வரன்(வயது28). இவர் கடந்த 27-ந் தேதி மது குடித்து தெருவில் தகராறு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. . அப்போது அதே பகுதியில் எலட்ரிக்கல் கடை நடத்தி வரும் கோகுலமகிராஜா(41) என்பவர் ஏன் குடிபோதையில் தகராறு செய்கிறாய்? என விக்னேஸ்வரனை தட்டிக்கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

கொலை வழக்கு

தாக்குதலில் காயமடைந்த விக்னேஷ்வரன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலமகிராஜாவை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி விக்னேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story