போளூர் தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 9,725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி


போளூர் தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 9,725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 2 May 2021 11:54 PM IST (Updated: 2 May 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

போளூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 9,725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

ஆரணி-

கலசபாக்கம் தொகுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. சார்பில் கே.வி.சேகரன், அ.ம.மு.க. சார்பில் விஜயக்குமார், நாம்தமிழர் கட்சி சார்பில் லாவண்யா,  மக்கள்நீதி மய்யம் சார்பில் கலாவதி உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

போளூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை ஆரணி தச்சூரில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் முன்னிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை 24 சுற்றுகளாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து. அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து முன்னிலைபெற்று வந்தார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெற்றி

வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

வாக்குகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்- 2,43,833
பதிவானவை-     2,00,754
செல்லாதவை -27
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.)- 97,732
கே.வி.சேகரன் (தி.மு.க.)- 88,007
எல்.லாவண்யா (நாம்தமிழர் கட்சி)- 10,169
ஜி.கலாவதி (மக்கள் நீதி மய்யம்)- 1,568
சி.விஜயக்குமார் (அ.ம.மு.க.)- 652
எம்.எழிலரசு (பகுஜன் சமாஜ் கட்சி)- 602
ஆர்.தட்சிணாமூர்த்தி (சுயே)- 1,188
டி.முருகேசன் (சுயே)- 278
ஏ.சிவா (சுயே)- 216
இ.சண்முகசுந்தரம் (சுயே)-87
பி.சத்தியராஜ்  (சுயே)- 85
சிதம்பரம் (சுயே)- 72
எஸ்.கலைமணி (சுயே)- 56
சி.கணேசன் (சுயே)- 59
கே.கிருஷ்ணமூர்த்தி (சுயே)- 50
நோட்டா -1,134.

சான்றிதழ்

அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. வேட்பாளர் கே.வி.சேகரனை விட 9,725 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அவர் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் வழங்கினார்.

Next Story