மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மணிகண்ணன் வெற்றிபெற்றார். + "||" + In Ulundurpet constituency DMK Candidate Manikannan wins

உளுந்தூர்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மணிகண்ணன் வெற்றிபெற்றார்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மணிகண்ணன் வெற்றிபெற்றார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மணிகண்ணன் வெற்றிபெற்றார்.

உளுந்தூர்பேட்டை


15 பேர் போட்டி

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் குமரகுரு(அ.தி.மு.க.), ஏ.ஜெ.மணிகண்ணன்(தி.மு.க.), கே.ஜி.பி.ராஜாமணி(அ.ம.மு.க.), சின்னையன்(மக்கள் நீதி மய்யம்), புஷ்பமேரி(நாம்தமிழர் கட்சி) உள்பட 15 பேர் களத்தில் இருந்தனர். 
வாக்கு எண்ணிக்கை கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பொறியியல் கல்லூரில் 30 சுற்றுகளாக நடைபெற்றது. தொடக்கத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு முன்னிலையில் இருந்தார். பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளர் மணிகண்ணன் முன்னிலையில் இருந்து வந்தார்.

தி.மு.க.வெற்றி

இறுதி சுற்றில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை விட 5,256 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் மணிகண்ணன் 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார். இவரது வெற்றிக்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் மணிக்கண்ணனிடம் வழங்கினார். 
வாக்குவாதம்
முன்னதாக கள்ளக்குறிச்சி வாக்கு எண்ணும் மையத்தில் காலையில் இருக்கைகள் ஒதுக்குவது சம்பந்தமாக அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதி முடிவுகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்- 2,93,362
பதிவான வாக்குகள்- 2,44,362
செல்லாதவை- 287

தபால் வாக்குகள்
தி.மு.க.- 1107
அ.தி.மு.க.- 1235
அ.ம.மு.க.- 5
மக்கள்நீதி மய்யம்- 4
நாம்தமிழர் கட்சி- 46

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 

ஏ.ஜெ.மணிகண்ணன்(தி.மு.க.)- 1,14,344
குமரகுரு(அ.தி.மு.க.)          - 1,08,960
கே.ஜி.பி.ராஜாமணி(அ.ம.மு.க.)- 2,843
சின்னையன்(மக்கள் நீதி மய்யம்)- 673
புஷ்பமேரி(நாம் தமிழர் கட்சி)- 8,954
 நோட்டா- 2,277

தொடர்புடைய செய்திகள்

1. ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வெற்றி
ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றார்.
2. பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்துல்வகாப் வெற்றி
பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்துல்வகாப் வெற்றி பெற்றார்.