கோவில்களில் அன்னதானம் சாப்பிட்டு பசியாறிய ஆதரவற்றோர்
கோவில்களில் அன்னதானம் சாப்பிட்டு பசியாறிய ஆதரவற்றோர்
கோவை
கொரோனா காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவையில் நேற்று சிறு தள்ளுவண்டி கடைகள் முதல் பெரிய உணவகங்கள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
இதனால் சாலையோரத்தில் வசிப்பவர்கள், விடுதி களில் உள்ளவர்கள் உணவின்றி தவித்தனர். ஆனால் கோவையில் உள்ள 12 அம்மா உணவகங்களும் நேற்று திறந்து இருந்தன. இதனால் அங்கு பலரும் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று உணவு வாங்கி சாப்பிட்டனர்.
இதேபோல் கோவை தண்டு மாரியம்மன், கோனியம்மன், காந்திபார்க் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அன்னதானம் பார்சல் கட்டி வழங்கப்பட்டது. அதை ஆதரவற்றவர்கள் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டனர்.
இது குறித்து கோவில் ஊழியர்கள் கூறும் போது, நேற்று முழுஊரடங்கு என்பதால் வழக்கமான நாட்களை விட கூடுதல் உணவு பார்சல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்றனர்.
இதுதவிர கோவை அரசு தலைமை ஆஸ்பத்திரி, டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதியில் தன்னார்வலர்கள் தங்களது வீடுகளில் உணவு தயார் செய்து கொண்டு வந்து ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு வினியோகம் செய்தனர். இதனால் உணவின்றி தவித்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story