4 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை


4 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை
x
தினத்தந்தி 3 May 2021 12:51 AM IST (Updated: 3 May 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை 
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை  8 மணிக்கு வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் 49 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 
வாக்குச்சவாடி முகவர்கள் 
இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தபால் வாக்குகளை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு வாக்குகள் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு சுற்று வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

Next Story