நன்னிலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் வெற்றி
நன்னிலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரை விட 4,424 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் சட்டசபை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,71,466 உள்ளனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 2,21,457 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்து இருந்தனர். நேற்று வாக்கு எண்ணிக்கை திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நடந்தது.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 27 சுற்றுகள் நடந்தது. முடிவில் அ.தி்.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் 1,03,637 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமனை விட 4,424 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
வெற்றி பெற்ற அமைச்சர் காமராஜூக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் பானுகோபன் வழங்கினார்.
வாக்குகள் விவரம்
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
காமராஜ்(அ.தி.மு.க.)- 1,03,637
ஜோதிராமன்(தி.மு.க.)-99213
பாத்திமாபர்ஹானா(நாம் தமிழர்)-13419
ராமச்சந்திரன் (அ.ம.மு.க.) -2076
ரவிச்சந்திரன்(பகுஜன்சமாஜ்)-711
கணேசன்(சுயே)-381
நடராஜன்(சுயே)-352
அனுஜா(சுயே)-206
முருகவேல்(சுயே)-164
தமிழ்செல்வி(சுயே)-153
ராஜா(சுயே)-125
பனசைஅரங்கன்(சுயே)-111
நித்தியானந்தம்(சுயே)-81
குமரன்(சுயே)-78
கிருஷ்ணன்(சுயே)-42
நோட்டா - 703
Related Tags :
Next Story