அரூர் தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது-சம்பத்குமார் எம்.எல்.ஏ. வெற்றி


அரூர் தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது-சம்பத்குமார் எம்.எல்.ஏ. வெற்றி
x
தினத்தந்தி 2 May 2021 7:35 PM GMT (Updated: 2 May 2021 7:35 PM GMT)

அரூர் சட்டமன்ற தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இந்த தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக வே.சம்பத்குமார் வெற்றி பெற்றார்.

தர்மபுரி:
அரூர் சட்டமன்ற  தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இந்த தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக வே.சம்பத்குமார் வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க. கைப்பற்றியது
தமிழக சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டம் அரூர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட வே.சம்பத்குமார் 99 ஆயிரத்து 61 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் குமார் 68 ஆயிரத்து 699 வாக்குகள் பெற்றுள்ளார்.
அரூர் தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வே.சம்பத்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 2-வது முறையாக போட்டியிட்ட அவர் 30 ஆயிரத்து 362 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இந்த தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றி உள்ளது.
வாக்குகள் விவரம்
அரூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்- 2,49,796
பதிவான வாக்குகள்-1,98,565
வே.சம்பத்குமார் (அ.தி.மு.க.) -99,061
ஏ.குமார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) -68,699
ஆர்.முருகன் (அ.மு.மு.க.) - 14,327
கே.கீர்த்தனா (நாம் தமிழர் கட்சி) -10,950
எஸ்.சதீஷ்குமார் (ஐ.ேஜ..கே) -282
நோட்டா வாக்குகள்-2,249
செல்லாத வாக்குகள்
இந்த தொகுதியில் பெறப்பட்ட தபால் வாக்குகளில் 423 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. அரூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் வே.சம்பத்குமாருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முத்தையன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

Next Story