மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டன
மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டன.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்குகள் எண்ணப்பட்டன
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்த 7 லட்சத்து 61 ஆயிரத்து 324 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5 லட்சத்து 68 ஆயிரத்து 953 பேர் வாக்களித்துள்ளனர். இதில் 73.39 சதவீதம் பதிவாகியுள்ளன.
மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஏ.வி.சி. கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணியளவில் வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டிருந்தன.
கண்காணித்தனர்
இதில், மயிலாடுதுறை தொகுதியில் 342 வாக்குப்பதிவு எந்திரங்கள், 25 சுற்றுகளாகவும், சீர்காழி தொகுதியில் 348 வாக்குப்பதிவு எந்திரங்கள் 25 சுற்றுகளாகவும், பூம்புகார் தொகுதியில் 383 வாக்குப்பதிவு எந்திரங்கள் 28 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டன.அனைத்து மேஜைகளிலும் ஒவ்வொரு வேட்பாளரின் ஒரு முகவர் நின்று வாக்கு எண்ணிக்கையை கண்காணித்தனர். முன்னதாக தபால் வாக்குகளுக்கு என்று தனி டேபிள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. நேற்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு இரவு வரை நீடித்தது.
Related Tags :
Next Story