கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது
x
தினத்தந்தி 3 May 2021 1:32 AM IST (Updated: 3 May 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.
3 தொகுதிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள் 6 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. 
இதில் பர்கூர், ஓசூர், தளி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பறி உள்ளது. இதில் ஓசூர், பர்கூர் தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களும், தளி தொகுதியில் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். 
பர்கூர் 
பர்கூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.மதியழகன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கிருஷ்ணனை விட 12 ஆயிரத்து 614 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-
பதிவான வாக்குகள் - 1,97,784
தபால் வாக்குகளில் செல்லாதவை - 437
டி.மதியழகன் - தி.மு.க. - 97,256
ஏ.கிருஷ்ணன் - அ.தி.மு.க. - 84,642
க.கருணாகரன் (நாம் தமிழர் கட்சி) - 10,116
ச.கணேசகுமார்  (அ.ம.மு.க.) - 1061
மஞ்சுநாதன்  சுயேச்சை - 629
நோட்டா - 1,518
தளி 
தளி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் டி.ராமச்சந்திரன் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சி.நாகேஷ்குமாரை விட 56 ஆயிரத்து 70 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-
பதிவான வாக்குகள் - 1,93,644
தபால் வாக்குகளில் செல்லாதவை - 204
டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) - 1,20,377
டாக்டர் சி.நாகேஷ்குமார் (பா.ஜனதா)- 64,307
ஆர்.மேரிசெல்வராணி (நாம் தமிழர் கட்சி) - 3,776
வி.அசோக்குமார் (இந்திய ஜனநாயக கட்சி) - 788
எம்.வி.சேகர் (அ.ம.மு.க.)-346
நோட்டா-1,962
ஓசூர்
ஓசூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஒய்.பிரகாஷ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜோதி பாலகிருஷ்ணரெட்டியை விட 12 ஆயிரத்து 367 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஓட்டு விவரம் வருமாறு:-
பதிவான வாக்குகள் - 2,48,098
தபால் வாக்குகளில் செல்லாதவை- 264
ஒய்.பிரகாஷ் (தி.மு.க.)- 1,18,231
எஸ்.ஜோதி பாலகிருஷ்ணரெட்டி(அ.தி.மு.க.)- 1,05,864
சே.கீதாலட்சுமி (நாம் தமிழர் கட்சி)- 11,422
மசூத் (மக்கள் நீதி மய்யம்) -6,563
எம்.மாரேகவுடு (அ.ம.மு.க.)- 806
நோட்டா-1,976

Next Story