மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 3 தொகுதிகளை கைப்பற்றியது + "||" + AIADMK in Krishnagiri district The coalition captured 3 constituencies

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 3 தொகுதிகளை கைப்பற்றியது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 3 தொகுதிகளை கைப்பற்றியது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 3 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 3 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
3 தொகுதிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக்  கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டன. இதில் ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய 3 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
 வேப்பனப்பள்ளி 
வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பி.முருகனை விட 3 ஆயிரத்து 54 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
பதிவான வாக்குகள் - 2,05,141
செல்லாத வாக்குகள் - 322
கே.பி.முனுசாமி (அ.தி.மு.க.)- 94,104
பி.முருகன்(தி.மு.க.)- 91,050
மு.சக்திவேல் (நாம் தமிழர் கட்சி)- 8,310
எஸ்.எம்.முருகேசன் (தே.மு.தி.க.)- 3,601
அமானுல்லா (சுயேச்சை) - 3,022
ஜெயபால் (மக்கள் நீதிமய்யம்)-672
நோட்டா - 1,662
ஊத்தங்கரை (தனி) 
ஊத்தங்கரை தனி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.எம்.தமிழ்செல்வம்
 தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ஆறுமுகத்தை விட 28 ஆயிரத்து 82 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஓட்டுகள் விவரம் வருமாறு:-
பதிவான வாக்குகள் - 1,,87,062
தபால் வாக்குகளில் செல்லாதவை -214
டி.எம்.தமிழ்செல்வம் - (அ.தி.மு.க)- 99,003
எஸ்.ஆறுமுகம்(காங்கிரஸ்)- 70,921
கே.இளங்கோவன்(நாம் தமிழர் கட்சி) - 10,341
ஆர்.பாக்கியராஜ்(தே.மு.தி.க.)- 2,276
கே.முருகேசன் (மக்கள் நீதி மய்யம்)-1,250
நோட்டா - 1,353
கிருஷ்ணகிரி
 கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவனை குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பதிவான வாக்குகள் -2,10,325
கே.அசோக்குமார் (அ.தி.மு.க.)-96.050
டி.செங்குட்டுவன்(தி.மு.க.)-95,256
வி.நிரந்தரி (நாம் தமிழர் கட்சி)-11,041
ஆர்.கே.ரவிசங்கர்(மக்கள் நீதி மய்யம்)-3,440
அமீனுல்லா - ஓவைசி (அ.ம.மு.க. கூட்டணி)-852
நோட்டா -1,827