மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி விவசாயி பலி + "||" + Farmer killed

மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி
மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.
அன்னவாசல், மே.3-
இலுப்பூர் அருகே உள்ள இருந்திராப்பட்டி மாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 60). விவசாயியான இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள வயலுக்கு சென்றார். இந்த நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது, திடீரென்று சிதம்பரத்தை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி இருந்திராப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முருகன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சிதம்பரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. கண்மாயில் மூழ்கி விவசாயி பலி
கண்மாயில் மூழ்கி விவசாயி பலியானார்.
2. கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; விவசாயி பலி
வடக்கு விஜயநாராயணம் அருகே காரும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி பலியானார்.
3. கிணற்றில் மூழ்கி விவசாயி பலி
பழனி அருகே கிணற்றில் மூழ்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
4. மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலியானார்.
5. மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் விவசாயி பலி
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் விவசாயி பலியானார்.