பூதலூர் வட்டாரத்தில் 3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது அதிகாரி தகவல்


பூதலூர் வட்டாரத்தில் 3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 3 May 2021 2:23 AM IST (Updated: 3 May 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

திருக்காட்டுப்பள்ளி:-
பூதலூர் வட்டாரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் விஜயராஜ் கூறியதாவது:- பூதலூர் வட்டாரத்தில் இதுவரை 3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினமும் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூதலூர் வட்டாரத்தில் 3 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் அரசு மருத்துவமனைகளிலும் தினந்தோறும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story