திட்டக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கணேசன் எம்.எல்.ஏ. மீண்டும் வெற்றி பா.ஜ.க. வேட்பாளரை விட 21,563 வாக்குகள் கூடுதலாக பெற்றார்
திட்டக்குடி(தனி) சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கணேசன் எம்.எல்.ஏ. மீண்டும் வெற்றிபெற்றார். இவர் பா.ஜ.க. வேட்பாளரை விட 21,563 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.
விருத்தாசலம்,
திட்டக்குடி(தனி) சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. வேட்பாளராக பெரியசாமி, தே.மு.தி.க. வேட்பாளராக உமாநாத், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக ரவிச்சந்திரன், தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளராக அருள்தாஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக காமாட்சி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக பிரபாகரன் மற்றும் 8 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியை பொறுத்தவரையில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் கூட தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த தொகுதியில் கடந்த மாதம் 6-ந் தேதி நடந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 19 ஆயிரத்து 390 பேரில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 389 வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர். அதாவது 76.30 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் உள்ள டேனி பொறியியல் கல்லூரியில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த வாக்குகள் அனைத்தும் நேற்று காலையில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே கணேசன் எம்.எல்.எ. முன்னிலையில் இருந்து வந்தார். மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் கணேசன் எம்.எல்.ஏ. 83 ஆயிரத்து 726 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பெரியசாமி 62 ஆயிரத்து 163 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதன் மூலம் 21 ஆயிரத்து 563 வாக்குகள் வித்தியாசத்தில் கணேசன் எம்.எல்.எ. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு வெற்றிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story