சிரித்து பேசிக்கொண்ட அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்கள்


சிரித்து பேசிக்கொண்ட அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 2 May 2021 9:14 PM GMT (Updated: 2 May 2021 9:14 PM GMT)

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்கள் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

திருப்பூர்
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக க.செல்வராஜூம், அ.தி.மு.க. வேட்பாளராக குணசேகரனும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. அரசு  மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டது. அதன்படி பதிவான வாக்குகள் நேற்று காலை எண்ணப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஒரு அறையில் தி.மு.க. வேட்பாளர் க.செல்வராஜ், அ.தி.மு.க. வேட்பாளர் குணசேகரன் ஆகியோர்  அமர்ந்து வாக்கு எண்ணிக்கையை கவனித்து வந்தனர். 
இந்த தொகுதியை பொருத்தவரை வாக்குகள் எண்ணப்பட்ட தொடக்கத்தில் குணசேகரகன் முன்னிலை வகித்தார். அதன்பின்னர் ஒவ்வொரு சுற்று முடிவிலும் அ.தி.மு.க., தி.மு.க. என மாறிமாறி முன்னிலை வகித்தன. இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என மதில்மேல்பூனையாக இருந்தது. இதனால் ஒவ்வொரு சுற்றின் முடிவும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தது. யார் வெற்றிபெறுவார்கள் என வேட்பாளர்களின் முகவர்களுக்கு திக்... திக் என்று இருந்த நிலையில் க.செல்வராஜூம், குணசேகரனும் சகஜமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். மேலும் மற்ற தொகுதிகளில் யார் முன்னிலை என விவாதித்துக்கொண்டனர். இது அங்கிருந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. 

Next Story