சிதம்பரம் தொகுதியை மீண்டும் கைப்பற்றிய அ.தி.மு.க.
அ.தி.மு.க.
கடலூர்,
சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பாண்டியன், தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அப்துல்ரகுமான், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நந்தினி தேவி, மக்கள் நீதிமய்யம் தேவசகாயம், நாம்தமிழர் கட்சி நடராஜன் கிருஷ்ணமூர்த்தி மற்றும இதர கட்சிகள், சுயேச்சைகள் என்று 6 பேர் என்று மொத்தம் 11 பேர் தேர்தல் களத்தில் இருந்தனர்.
இதற்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியன் 91,961 (தபால் ஓட்டுக்கள் சேர்த்து) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமானை விட 16937 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வேட்பாளர் பாண்டியனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-கலெக்டர் மதுபாலன் சான்றிதழ் வழங்கினார்.
இறுதி முடிவுகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள் -250998
பதிவான வாக்குகுள் - 183730
வாக்கு சதவீதம் -71.93
செல்லாதவை - 378
Related Tags :
Next Story