திருப்பூரில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து திருப்பூரில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
திருப்பூர்
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து திருப்பூரில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தி.மு.க. வெற்றி
தமிழகத்தில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று இந்தவாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கேயம், மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்தலில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி தி.மு.க. வெற்றி பெற்றது.
பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்
தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அதன்படி மாநகரில் காங்கேயம் ரோடு, வெங்கடேஷ்வரா நகர், அண்ணாநகர், வெள்ளியங்காடு, வாக்கு எண்ணும் மையம் அருகே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தனர்.
மேலும், கட்சி கொடியுடன் கோஷமிட்டனர். முழு ஊரடங்கு மற்றும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் மாநகர் பகுதிகளில் முக்கிய பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், அங்கு பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். இருப்பினும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பல தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தனர்.
Related Tags :
Next Story