சட்டமன்ற தேர்தலில் வெற்றி: குறிஞ்சிப்பாடி தொகுதியை மீண்டும் தக்க வைத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தக்க வைத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடலூர்,
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செல்விராமஜெயம், தி.மு.க. சார்பில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. சார்பில் வசந்தகுமார், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் சந்திரமவுலி, நாம் தமிழர் கட்சி சார்பில் சுமதி உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.
இதற்கான தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 1,01,681 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி ராமஜெயம் 84,232 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 17,449 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கினார்.
இறுதி முடிவுகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்- 2,43,164
பதிவான வாக்குகள்-1,99,795
வாக்கு சதவீதம் -82.06
தபால் ஓட்டுகள்
மொத்தம் - 1,975
தி.மு.க.- 993
அ.தி.மு.க. - 451
நோட்டா - 4
செல்லாதவை - 468
வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்(தி.மு.க.) - 1,01,681
செல்வி ராமஜெயம்(அ.தி.மு.க.) - 84,232
வசந்தகுமார் (அ.ம.மு.க.) -840
சந்திரமவுலி (மதசார்பற்ற ஜனதா தளம்) - 1,190
சுமதி(நாம்தமிழர் கட்சி) -8,520
நோட்டா-1,215
Related Tags :
Next Story