மது விற்ற 29 பேர் கைது
மாவட்டம் முழுவதும் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக மது விற்ற 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரிலும் மாவட்டம் முழுவதும் மது விலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கரூர் டவுன் போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பவர்களை பிடிக்க ரகசியமாக கண்காணித்து வந்தனர். அந்தவகையில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்றதாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 29 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கார்கள், 4 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 3,576 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் எச்சரித்தார்.

Related Tags :
Next Story