மழையால் வீடு இடிந்து சேதம்


மழையால் வீடு இடிந்து சேதம்
x

வத்திராயிருப்பில் தொடர்மழையினால் வீடு இடிந்து சேதமானது.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி கோபாலபுரம், கான்சாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வத்திராயிருப்பு மேலப்பாளையம் நடுத்தெருவில் மீனா (வயது50) வசித்து வருகிறார். கூலி தொழிலாளி. இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக மீனா வசித்து வந்த வீட்டின் ஒருபக்க சுவர் விழுந்து சேதமடைந்துள்ளது. இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

Next Story