தூக்குப்போட்டு வாலிபர் சாவு


தூக்குப்போட்டு வாலிபர் சாவு
x
தினத்தந்தி 9 May 2021 1:58 AM IST (Updated: 9 May 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் தூக்குப்போட்டு வாலிபர் தற்ெகாலை செய்து கொண்டார்.

விருதுநகர், 
விருதுநகர் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 50). இவரது மகன் அருண்குமார் (21). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் மன நலம் பாதிக்கப்பட்டார். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அருண்குமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் முனியம்மாள் வெளியே சென்று பார்த்தபோது அருண்குமார் வீட்டின் எதிரே இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைக்கண்டு கதறியழுதார்.  உறவினர்கள் உதவியுடன் தூக்கில் தொங்கிய அருண் குமாரை கீழே இறக்கி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி முனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story