3 ஆண்டுகளாக போலீசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்த பேட்டரி திருடன் கைது


3 ஆண்டுகளாக போலீசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்த பேட்டரி திருடன் கைது
x
தினத்தந்தி 9 May 2021 2:11 AM IST (Updated: 9 May 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு 3 ஆண்டுகளாக ‘டிமிக்கி’ கொடுத்து வந்த பேட்டரி திருடனை தீவிர தேடிவந்தனர்.

பெரம்பூர், 

சென்னை கொடுங்கையூர், எம்.கே.பி. நகர் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டின் முன்பு சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோ, கார், லாரிகளை குறிவைத்து அதில் இருக்கும் பேட்டரிகள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து திருட்டுபோய் வந்தது. இதுதொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு 3 ஆண்டுகளாக ‘டிமிக்கி’ கொடுத்து வந்த பேட்டரி திருடனை தீவிர தேடிவந்தனர்.

இந்தநிலையில் கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அதில் அவர், காசிமேடு காசிபுரம் பகுதியை சேர்ந்த அஜியப்பன் (வயது 39) என்பதும், இவர்தான் கொடுங்கையூர் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு மேலாக வாகனங்களில் இருந்து பேட்டரி திருடி வந்ததும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story