திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. டி.சி.விஜயன் மரணம்
திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. டி.சி.விஜயன் உடல் நலக்குறைவால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. முன்னாள் எம.எல்.ஏ.வும், தி.மு.க. முன்னோடி பிரமுகர்களில் ஒருவருமான டி.சி.விஜயன், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 68.
கடந்த சில நாட்களாக டி.சி.விஜயன், உடல் நலக்குறைவால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு அவருக்கு கொரோனா தொற்று குணமடைந்து விட்டதாகவும், ஆனால் சளி தொற்று காரணமாக தற்போது அவர் உயிரிழந்துவிட்டதாகவும் டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது.
Related Tags :
Next Story