தஞ்சையில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்ற மதுபிரியர்கள்


தஞ்சையில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்ற மதுபிரியர்கள்
x
தினத்தந்தி 9 May 2021 2:31 AM IST (Updated: 9 May 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் கலைகள் மூடப்படுகிறது. இதனால் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை மதுபிரியர்கள் வாங்கிச் சென்றனர்.

தஞ்சாவூர்:
தஞ்சையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் கலைகள் மூடப்படுகிறது. இதனால் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை மதுபிரியர்கள் வாங்கிச் சென்றனர்.
டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் கடந்த 20-ந்தேதி முதல் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரமும் குறைக்கப்பட்டது. மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டது.
அதுவும் மதுபான பார்கள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் மேலும் குறைக்கப்பட்டது டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நான்கு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள்
அதன்படி நேற்று டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாளை (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்டது. கடைகள் 12 மணிவரை தான் திறந்து இருக்கும் எனக்கருதி டாஸ்மாக் கடைகளுக்கு மதுபிரியர்கள் அதிக அளவில் வந்தனர். தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள உயர்ரக மதுபான டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். சிலர் தாங்கள் எடுத்து வந்த பைகளில் மதுபாட்டில்களை வாங்கி எடுத்துச் சென்றனர். 
நேரம் ஆக ஆக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்த மது பிரியர்கள் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி பைகளில் எடுத்துச் சென்றதை பார்க்க முடிந்தது.

Next Story