ஓமலூர் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


ஓமலூர் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2021 4:22 AM IST (Updated: 9 May 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஓமலூர்:
ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி போயர் தெருவை சேர்ந்தவர் சகிதிவேல். இவரது மகள் சரண்யா (வயது 19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று சரண்யா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 15 நாட்களே ஆவதால் மேட்டூர் உதவி கலெக்டர் விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

Next Story