சேலத்துக்கு சரக்கு ரெயிலில் வந்த 2 ஆயிரம் டன் கடலை பருப்பு, நெல்


சேலத்துக்கு சரக்கு ரெயிலில் வந்த 2 ஆயிரம் டன் கடலை பருப்பு, நெல்
x
தினத்தந்தி 9 May 2021 4:23 AM IST (Updated: 9 May 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு ரெயிலில் வந்த 2 ஆயிரம் டன் கடலை பருப்பு, நெல்

சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்தநிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து நேற்று 2 ஆயிரம் டன் கடலை பருப்பு மற்றும் நெல் ஆகியவை சரக்கு ரெயில் மூலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கடலை பருப்பு, நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினர். பின்னர் அவை மாவட்டத்தில் உள்ள குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Next Story