ஆத்தூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலி


ஆத்தூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
x
தினத்தந்தி 9 May 2021 4:23 AM IST (Updated: 9 May 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு 3 பேர் பலி

ஆத்தூர்:
ஆத்தூரில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டு சிலர் இறந்தும் வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் ஆத்தூரை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தனர். ஆத்தூர் அண்ணா தெருவை சேர்ந்த 47 வயது பெண், மாரிமுத்து ரோடு பகுதியை சேர்ந்த 62 வயது பெண், வ.உ.சி. நகரை சேர்ந்த 38 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் கடந்த ஒரு வாரத்தில் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story