நாமக்கல்லில் டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்த பெண்கள்
நாமக்கல்லில் டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்த பெண்கள்
நாமக்கல்,
கொரோனாவின் 2-வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் பகுதியாக அரசு பஸ்களில் 50 சதவீதம் பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தது. அதே நேரத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு விட்டதால், பஸ்களில் குறைவான நபர்களே பயணம் செய்து வந்தனர். இதனால் நஷ்டம் ஏற்பட தொடங்கியதால் தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் பெரும்பாலான பஸ்களை நிறுத்தி கொண்டனர்.
இதற்கிடையே தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் வெற்றி பெற்றால் நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்து இருந்தது. அதன்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற உடனே இந்த திட்டத்தை நிறைவேற்றினார். இந்த திட்டம் நேற்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்தது.
இதையொட்டி நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர், மோகனூர் மற்றும் ராசிபுரம் செல்லும் டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்வது தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த பஸ்களில் சென்ற பெண்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தனர்.
இதேபோல மாவட்டத்தில் உள்ள நகரங்களிலும் டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்தனர்.
==========
Related Tags :
Next Story