பரமத்தி அருகே தொழில் அதிபர் தற்கொலை
பரமத்தி அருகே தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்,
பரமத்தி அருகே உள்ள அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்தவர் அப்புசாமி (வயது 52). தொழில் அதிபரான இவர் திருப்பூரில் சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்தநிலையில் அப்புசாமிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விசாரணை
ஆனால் செல்லும் வழியிலேயே அப்புசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட அப்புசாமிக்கு, வசந்தி (45) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
==========
Related Tags :
Next Story