3-வது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்காக கொரோனா தடுப்பு சிறப்பு பணிக்குழு - மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
குழந்தைகளுக்காக கொரோனா தடுப்பு சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட உள்ளதாக மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
மும்பை,
நாட்டிலேயே மராட்டித்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் நாட்டில் 3-வது கொரோனா அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும் தற்போது வாலிபர்கள், சிறுவர்களுக்கும் கூட தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக 2-வது கொரோனா அலையில் கடந்த பிப்ரவரி 15-ந் தேதி முதல் மாநிலத்தில் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட 18 வயதுக்கும் குறைந்தவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-வது அலை சிறுவர்களை அதிகளவில் தாக்கும் என்று கூறுப்படுகிறது. எனவே மாநிலத்தில் குழந்தைகளுக்காக கொரோனா தடுப்பு சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ள 3-வது கொரோனா அலையை எதிர்கொள்ள குழந்தைகள் தடுப்பு குழு அமைக்கப்பட உள்ளது. குழந்தைகளுடன் தாயும் இருப்பார் என்பதால் அவர்களுக்காக புதிய வடிவிலான தனிமை அல்லது சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட வேண்டியது உள்ளது.
இவ்வாறு அவர் கூறினாா்.
Related Tags :
Next Story