கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி போராட்டம் நடத்திய யூடியூப் பிரபலம் கைது
கல்வி கட்டணத்ைத குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய யூடியூப் பிரபலம் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
கொரோனா பரவலை கட்டுபடுத்த மாநிலம் முழுவதும் கடும் கட்டுபாடுகள் அமலில் உள்ளது. பொது மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி யூடியூப் பிரபலம் விகாஸ் பாதக் என்ற இந்துஸ்தானி பாவு தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், " விகாஸ் பாதக் ஆம்புலன்சில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அரசின் கட்டுபாடுகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரை கைது செய்து உள்ளோம் " என்றனர்.
Related Tags :
Next Story