மாவட்ட செய்திகள்

4 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் - வெளிநாட்டு முன்னாள் ராணுவ வீரா் கைது + "||" + 4 kg of heroin with drugs - Foreign Ex-Serviceman Arrested

4 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் - வெளிநாட்டு முன்னாள் ராணுவ வீரா் கைது

4 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் - வெளிநாட்டு முன்னாள் ராணுவ வீரா் கைது
4 கிலோ ஹெராயினுடன் வெளிநாட்டு முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,

எத்தியோப்பியாவில் இருந்து சமீபத்தில் சாம்பியா நாட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கெனித் முலோவா மும்பை வந்தார். அவர் மும்பை விமானநிலையம் அருகில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

எனவே போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விமானநிலையம், ஓட்டலுக்கு வெளியில் அவரை கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் விட்டு சென்ற டிராலி பேக்கை எடுக்க விமானநிலையம் வந்தார். அப்போது ஏர்இந்தியா ஊழியர்கள் போல மாறுவேடத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரை கண்காணித்து கொண்டு இருந்தனர்.

இதில் அவர் டிராலி பேக்கை வாங்கியவுடன் அதிகாாிகள் அதை கைப்பற்றி சோதனை போட்டனர். அப்போது பையில் ரகசிய அறை அமைத்து அதில் ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பையில் இருந்து 4 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.26 கோடி என கூறப்படுகிறது.

இதையடுத்து அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சாம்பியா நாட்டு முன்னாள் ராணுவ வீரர் கெனித் முலோவாவை கைது செய்தனர்.