கலெக்டர் உத்தரவிட்டும்காய்கறி மாா்க்ெகட்டை மாற்றாமல் இருக்கும் அவலம் - அரசியல் தலையீடு காரணமா?


கலெக்டர் உத்தரவிட்டும்காய்கறி மாா்க்ெகட்டை மாற்றாமல் இருக்கும் அவலம் - அரசியல் தலையீடு காரணமா?
x
தினத்தந்தி 9 May 2021 8:27 PM IST (Updated: 9 May 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் சிவன் அருள் உத்தரவிட்டும் திருப்பத்தூர் நகராட்சி பெரிய காய்கறி மார்க்கெட்டை மாற்றாமல் வைத்துள்ளனர். இதற்கு அரசியல் தலையீடு காரணமா? என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகமாகப் பரவி வருகிறது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 2 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் திருப்பத்தூர் மற்றும் அனைத்து ஊர்களில் உள்ள காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை ஆகியவற்றை இடமாற்றம் செய்து, சமூக விலகலுடன் காய்கறிகளை விற்பனை செய்ய மாவட்ட கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டார். 

திருப்பத்தூர் சக்திநகரில் இயங்கி வரும் நகராட்சி பெரிய காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் ஆகிேயார் தலைமையில் நடந்த கூட்டத்தில் நகராட்சி காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. 

அதற்காக ஈத்கா மைதானம் உள்பட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு கடைகளை அமைப்பதற்கானப் பணிகள் தொடங்கின. ஆனால் நகராட்சி காய்கறி மார்க்கெட்டை ஏலம் எடுத்தவர்கள் அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. 

அரசியல் தலையீடு காரணமாக சக்திநகர் நகராட்சி ெபரிய காய்கறி மார்க்கெட்டை மாற்ற முடியாமல் உள்ளனர். இதனால் தினமும் காலை நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க குவிகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டும் நகராட்சி பெரிய காய்கறி மார்க்கெட்டை ஏன் மாற்றாமல் உள்ளனர்? என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் ெபரிய காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story