புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொடக்கம்
புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொடக்கம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வருவாய் கோட்டப்பகுதிகளில் கொரோனா நோய்தொற்று வேகத்தை கட்டுப்படுத்த பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் வருவாய்துறையினர் கொரோனா கோரப்பிடியில் இருந்துதப்பிக்க அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தகுதி உடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் வழங்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் வருவாய்த்துறையினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசினால் வரையறுக்கப்பட்ட கொரோனா நோய்த்தோற்று தொடர்பான விதிமீறல்கள் கண்டறியப்படின் அது தொடர்பான புகாரினை பொள்ளாச்சி சப்-கலெக்டர்அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 04259 - 224855 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் இதர புகார்கள், குறைகள் குறித்தும் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படின், அவை உடனடியாக சரி செய்ய ஆவண செய்யப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story