மளிகை கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
மளிகை கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
பந்தலூர்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன. இதை சம்பந்தப்பட்ட வியாபாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் பந்தலூர் பஜாரில் உள்ள கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்று தாசில்தார் தினேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் ஆகியோர் திடீரென ஆய்வு நடத்தினர்.
அப்போது ஒரு மளிகை கடையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் வாடிக்கையாளர்கள் கூட்டமாக நிற்பது தெரியவந்தது. இதனால் அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story