83 டவுன் பஸ்களில் பயணிக்க கட்டணம் இல்லை


83 டவுன் பஸ்களில் பயணிக்க கட்டணம் இல்லை
x
83 டவுன் பஸ்களில் பயணிக்க கட்டணம் இல்லை
தினத்தந்தி 9 May 2021 9:25 PM IST (Updated: 9 May 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

83 டவுன் பஸ்களில் பயணிக்க கட்டணம் இல்லை

பொள்ளாச்சி

அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் அனைத்து மகளிரும் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு நேற்றுமுன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ்களில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் எதுவும் ஒட்டப்படாததால் பஸ்சில் ஏறிய பெண்களுக்கு  குழப்பம் இருந்து வந்தது. அதனால் இது தொடர்பாக விசாரித்த பின்பே பஸ்களில்ஏறினர். 

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில், நேற்று பொள்ளாச்சி பகுதியில் இயங்கும் 83 நகர பஸ்களில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த ஸ்டிக்கரை பார்த்து பெண்கள் பஸ்களில்ஏறி மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.


இதுகுறித்து பெண்கள்கூறுகையில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பஸ் டிக்கெட் செலவு என்பதுபெரும் சுமையாக இருந்து வந்தது.பஸ்டிக்கெட் எடுப்பதற்கு கூட வழியில்லாமல்எத்தனையோ கூலி வேலை செய்யும் பெண்கள்தங்கள் நிறுவனத்திற்கு நடந்து செல்லும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில், 

தற்போது தமிழக முதல்-அமைச்சர்மு.க. ஸ்டாலின் அறிவித்த நகரப்பகுதிகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டம்  பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. 
இதுபோன்று அனைத்து தாழ்தள நகர பஸ்களிலும்  அறிமுகப்படுத்தினால் இன்னும் அதிகமான மகிழ்ச்சி ஏற்படும் என்றனர்.

Next Story