பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு


பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 9 May 2021 9:44 PM IST (Updated: 9 May 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் பகுதியில் பெய்த தொடர் மழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பெரியகுளம்:
பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை தனது முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து தற்போது உபரிநீர் வெளியேறி வருகிறது. இதன்காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வராக நதி தொடங்கும் கல்லாற்று பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆற்றில் நீர்வரத்து அதிக அளவு செல்கிறது.  
இந்தநிலையில் நேற்று காலை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால், ஆற்றை ஒட்டியுள்ள பெரியகுளம் போலீஸ் நிலைய வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, வழக்கு சம்பந்தமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் மற்றும் வேன் ஒன்று ஆற்றுக்குள் விழுந்தது. மேலும் ஆற்றின் கரையோரத்தில் இருந்த சில மரங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

Next Story