போலி பீடிகள் கடத்திய 3 பேர் கைது


போலி பீடிகள் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 May 2021 10:12 PM IST (Updated: 9 May 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

போலி பீடிகள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கல்லல், 
கல்லல் போலீசார் கல்லலில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு வாகனம் வந்தது. அந்த வாகனத்தை பிடித்து சோதனை செய்தபோது 13 பீடிபண்டல்கள் இருந்தன. அவை அனைத்தும் பிரபலமான கம்பெனியின் போலி பீடிகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் தென்காசி மாவட்டம் கலுவன்கோட்டையை சேர்ந்த பாபநாசம் மகன் பாஸ்கரன் (வயது39),அதே ஊரை சேர்ந்த கணபதி மகன் ராதாகிருஷ்ணன் (29), முத்துச்சாமி மகன் விக்னேஷ் (28) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்து கடத்தி வந்த பீடி பண்டல்களையும் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்து கல்லல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story