விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 9 May 2021 10:15 PM IST (Updated: 9 May 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் வாலிபர் பலியானார்.

திருப்பத்தூர், 
திருப்பத்தூர் அருகே கீழகாவனிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டி மகன் கருப்பையா (வயது25). இவர் சில மாதங்களுக்குமுன் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பி உள்ளார். இவர்  இரணியூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த கருப்பையா சிகிச்சைகாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக கருப்பையா உயிரிழந்தார். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story