மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது


மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 9 May 2021 10:19 PM IST (Updated: 9 May 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

சிங்கம்புணரி, 
சிங்கம்புணரி அருகே புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா திருக்களம்பூரரை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 35). இவர் சிங்கம்புணரி சுக்காம்பட்டி சாலையில் உள்ள மதுக்கடையில் மது பாட்டில்களை வாங்கி காரில் பதுக்கி வைத்து கொண்டு வந்தபோது வாகன சோதனையில் போலீசாரிடம் பிடிபட்டார். சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேசுவரி தலைமையிலான போலீசார் அவரிடம் இருந்து 911 மதுபாட்டில்களையும் காரையும் பறிமுதல் செய்தனர். பிரவீன் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story