திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றி சென்ற மினிலாரி சாலையில் கவிழ்ந்தது போக்குவரத்து பாதிப்பு


திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றி சென்ற மினிலாரி சாலையில் கவிழ்ந்தது போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 May 2021 4:59 PM GMT (Updated: 9 May 2021 4:59 PM GMT)

மினிலாரி சாலையில் கவிழ்ந்தது

அரசூர், 
புதுச்சேரி மாநிலம் திருவண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து மருத்துவ பயன்பாட்டுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிய மினி லாரி நேற்று கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்டது. மினிலாரியை கள்ளக்குறிச்சி அடுத்த மாடூரை சேர்ந்த செல்லப்பன் என்பவர் ஓட்டினார். மினிலாரி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மினிலாரி டிரைவர் முன்னாள் சென்ற மொபட் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார்.
அந்த சமயத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது லாரியில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் சாலையில் உருண்டு ஓடின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் டிரைவர் செல்லப்பன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய மினிலாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story