கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை


கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 May 2021 10:32 PM IST (Updated: 9 May 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை


மூங்கில்றைப்பட்டு

தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பணி நிமித்தம் காரணமாக பெங்களூரு, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். இவர்கள் மாவட்டத்தின் எல்லையாக விளங்கும் மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு வந்து செல்வதால் இங்கு பயணிகள் கூட்டம் நாட்களுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

மூங்கில்துறைப்பட்டில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டு் இருக்கின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை, திருக்கோவிலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி மற்றும் தூய்மைப்படுத்தும் பணியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story