தர்மபுரி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் கைது


தர்மபுரி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 9 May 2021 10:33 PM IST (Updated: 9 May 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி:
தர்மபுரி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
தர்மபுரி அருகே உள்ள சீரியம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சாம்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். 
இந்தநிலையில் சாம்ராஜ் மூலம் ஒட்டப்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் (43) என்பவருடன் மோகன்ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது வேல்முருகன் தான் நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்து இருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய மோகன்ராஜ் சில மாதங்களுக்கு முன்பு வேல்முருகனிடம் அரசு வேலை வாங்கி தரக்கோரி ரூ.9 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை.
போலீசில் புகார்
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்ராஜ், வேல்முருகனிடம் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். பலமுறை கேட்டும் வேல்முருகன் பணத்தை திருப்பி தரவில்லை. இதுகுறித்து மோகன்ராஜ் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வேல்முருகன், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story