ஒரே நாளில் ரூ 31 கோடிக்கு மது விற்பனை
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.31 கோடிக்கு மது விற்பனை யானது. மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
துடியலூர்
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.31 கோடிக்கு மது விற்பனை யானது. மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அப்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் முதல் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க கூட்டம் அலைமோதியது.
மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு பிடித்த பீர், ரம் உள்ளிட்ட மது வகைகளை வாங்கி சென்றனர். சிலர் தாங்கள் கொண்டு வந்த பைகளில் மதுபாட்டில்களை நிரப்பி சென்றனர்.
டாஸ்மாக் கடை தவிர்த்து எலைட் மதுபானக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு விலை உயர்ந்த மதுவகைகள் மற்றும் வெளிநாட்டு மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டது.
ரூ.31 கோடிக்கு மது விற்பனை
காந்திபுரத்தில் உள்ள எலைட் மதுக்கடை முன் கால்கடுக்க நின்றவர்கள், தங்களுக்கு பிடித்த உயர் ரக மதுபானங்களை உற்சாகத்துடன் வாங்கி சென்றனர். இதனால் மது விற்பனை அதிகரித்தது.
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.31 கோடிக்கு மது விற்பனையானது.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அது, நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு மற்றும் தெற்கு என்று பிரிக்கப்பட்டு உள்ளது.
இதில் கோவை வடக்கில் உள்ள 158 கடைகளில் ஒரே நாளில் ரூ.16 கோடியே 50 லட்சத்துக்கும், கோவை தெற்கில் உள்ள 135 டாஸ்மாக் கடைகளில் ரூ.14 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனையானது.
விற்பனை அதிகம்
அந்த வகையில் ஒரே நாளில் ரூ.31 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுக்கடை இயங்கும் நேரம் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை என்று மாற்றி அமைக் கப்பட்டது.
அப்போது கோவை மாவட்டத்தில் மொத்தம் ரூ.5 கோடிக்கு மட்டுமே மது விற்பனையானது. இது போல் நேற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை அதிகமாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story