கல்வராயன்மலையில் 2200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


கல்வராயன்மலையில்  2200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 9 May 2021 10:40 PM IST (Updated: 9 May 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் 2200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக மர்மநபர்கள் சாராய ஊறலை பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், கரியாலூர் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் உள்ளிட்ட போலீசார் கல்வராயன் மலையில் உள்ள வனப்பகுதியில் சாராய வேட்டையில் களம் இறங்கினர். 

அப்போது நாராயணபட்டி வனப்பகுதியில் உள்ள ஓடையில் 600 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறலை பதுக்கி வைத்ததாக அதே கிராமத்தை சேர்ந்த தர்மன் மகன் வீரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொடமாத்தி ஓடையில் பதுக்கி வைத்திருந்த 1,000 லிட்டர் சாராய ஊறல், சின்ன திருப்பதி வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 600 லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

Next Story