விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.15 கோடிக்கு மது விற்பனை


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.15 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 9 May 2021 5:13 PM GMT (Updated: 9 May 2021 5:13 PM GMT)

ரூ.15 கோடிக்கு மது விற்பனை

விழுப்புரம், 
விழுப்புரம் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான 124 டாஸ்மாக் கடைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 104 டாஸ்மாக் கடைகளும் ஆக மொத்தம் 228 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே ஊரடங்கையொட்டி கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மொத்தம் ரூ.15 கோடியே 35 லட்சத்து 53 ஆயிரத்து 380-க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


Next Story