கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள ஆவிபிடிக்கும் போலீசார்
உடுமலை போலீஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புகார் குறித்து விசாரிக்க தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் போலீசார் ஆவி பிடிக்கவும் கருவி வைக்கப்பட்டுள்ளது.
உடுமலை
உடுமலை போலீஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புகார் குறித்து விசாரிக்க தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் போலீசார் ஆவி பிடிக்கவும் கருவி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதைத்தொடர்ந்து, கொரோனா பரவலை தடுப்பதற்கு, அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படியான நடவடிக்கைகளை அரசு அலுவலகங்களிலும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் உடுமலை போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
போலீஸ் நிலையத்திற்கு பல்வேறு சம்பவங்கள் குறித்து புகார் கொடுக்க பொதுமக்கள் வருகிறார்கள். அவ்வாறான புகார்கள் தொடர்பாக விசாரிக்க எதிர் தரப்பினரும் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்படுகின்றனர். அதனால் சில நேரங்களில் போலீஸ் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் அதிகம்பேர் வரக்கூடிய சூழ்நிலை உருவாகிறது.
விசாரிக்க தனி இடம்
அதனால் கூட்டத்தை தவிர்க்கும்பொருட்டு, பொதுமக்களின் புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக, போலீஸ் நிலையத்தை ஒட்டி, வெளிப்பகுதியில் புதியதாக செட் அறை போடப்பட்டுள்ளது. அங்கு புகார் மனுக்களை பெற்று விசாரித்து, மேல் நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் கொடுப்பதற்கு தலைமைக்காவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புகார் கொடுக்க வருகிறவர்கள் உட்காருவதற்கு நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன. அந்த இடத்திற்கு சம்பந்தபட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆவி பிடிக்கும் போலீசார்
போலீஸ் நிலையத்திற்குள் போலீஸ் அதிகாரிகள், போலீசார் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் கைகளில் தேய்த்து கொள்வதற்கு நுழைவு வாயில் பகுதியில் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்திற்குள் மற்ற வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அதற்காக போலீஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் கயிறு கட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக ஆவி பிடிப்பதும் நல்லது என்று கூறப்படுகிறது. மூச்சை நன்றாக இழுத்து ஆவியை உள்வாங்கும் போது கிருமிகள் இருந்தால் அழிந்து விடும் என்று கூறப்படுகிறது. அதன்படி உடுமலை போலீஸ் நிலையத்தில் நுழைவு வாயில் கதவு அருகே ஆவி பிடிக்கும் கருவி வைக்கப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்துவது குறித்தும் அங்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில் அதன் பயன்பாடு 15 முதல் 20 நொடிகள் மட்டுமே தொடர வேண்டும். பிறகு ஆப் செய்து ஆன் செய்யவேண்டும். நல்ல தண்ணீர் பயன்படுத்தும் போது ஓரிரு உப்பு கல் போட்டுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு வரும் போலீசார் இந்த கருவியில் ஆவி பிடித்த பிறகே போலீஸ் நிலையத்திற்குள் செல்கின்றனர். இதன் பயன்பாட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தொடங்கி வைத்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story